Skip to main content

Posts

Showing posts from 2023

எய்ட்டிஃபை : எங்கெங்கும் ஏ.ஐ

 எய்ட்டிஃபை :  எங்கெங்கும் ஏ.ஐ #5 நீளமான ஒரு யூடியூப் வீடியோ. உங்களுக்குத் தேவையான தகவல்கள் செறிந்துள்ளன. முழுவதும் பார்க்க விரும்புகிறீர்கள். ஆனாலும் தற்சமயம் நேரமில்லை. பொறுமையும். என்ன செய்யலாம்? இதற்கான தீர்வோடு வந்துள்ளது "எய்ட்டிஃபை" (Eightify). இது ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி. குரோம் எக்ஸ்டென்சன். ஒரே கிளிக்கில் உங்கள் 'குரோம்'பேட்டைக்கு வந்துவிடுகிறது. என்னவெல்லாம் செய்கிறது எய்ட்டிஃபை? - வீடியோவில் சொல்லப்பட்டிருப்பதன் கதைச் சுருக்கத்தைத் தருகிறது. - டைம் ஸ்டாம்ப்புடன் இருப்பதால், வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதிக்கு எளிதில் செல்லலாம். - மொத்தச் சம்மரியையும் உங்களுக்குத் தேவையான வடிவில் எக்ஸ்ஃபோர்ட் செய்து கொள்ளலாம். - "இன்சைட்ஸ்" என்றொரு வசதியுள்ளது. முழு வீடியோவையும் பார்த்துவிட்டு, அதைப் பற்றி ஒரு குட்டிக் கட்டுரை எழுதியது போலுள்ளது. இலவசப் பிளானில் வாரத்திற்கு மூன்று சம்மரிகள் மட்டுமே. அதுவும் வீடியோ ஒரு மணிநேரத்திற்கும் குறைவானதாக இருக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ஸன் செய்து அன்லிமிட்டட் ஆப்ஷனைப் பெறலாம். ஆங்கிலம் மட்டுமேயல்ல. பிற மொழி வீடியோக்க...

வைஸ் ஒன் : எங்கெங்கும் ஏ.ஐ #4

நித்தம் நித்தம் புத்தம் புதிய செயற்கை நுண்ணறிவுச் சாப்ட்வேர்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போன்ற டூல்கள் குறித்த தகவல்களைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியே எங்கெங்கும் ஏ.ஐ. அடோபியின் பாட்காஸ்ட் என்ஹான்ஸ், ஃபோட்டோக்களை மெருகேற்கும் மேஜிக் ஸ்டூடியோ, பிடிப் ஃபைல்களுடன் உரையாட PDF.ai என மூன்று ஏ.ஐ டூல்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அந்த வரிசையில் நான்காவதாக இன்று, "வைஸ் ஒன்" (Wiseone) என்னும் டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். வைஸ் ஒன் மிகவும் சுவாரசியமான டூல். இது ஒரு பிரவுசர் எக்ஸ்டன்சன். கூகுள் குரோம் பிரவுசருடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. என்னெவெல்லாம் செய்யும் வைஸ் ஒன்? - வலைப் பக்கங்களின் கண்டென்ட்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஒரு நீளமான வலைப் பக்கத்தை முழுதும் படிக்காமல் "சம்மரைஸ்" என்றால் தெளிவாகச் சுருக்கிக் கொடுக்கிறது. - வலைப் பக்கங்களுடன் சாட் செய்ய உதவுகிறது. இது கடினமான தகவல்களைக் கொண்டுள்ள பக்கங்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது. - இந்தப் பக்கத்திலுள்ள கண்டென்ட்களுக்கு தொடர்புடைய செய்திகளைச் சட்டெனத் தேடிக் காண்பிக்கின்றது. எப்படிப் பெற...

தாத்தா சொன்ன கதைகள்

உங்களுக்கு எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தெரியுமா?  பத்து நாட்களாக அவருடன் தான் இருக்கின்றேன். ஆம். அவருடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பாய் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகின்றன.  இதற்கு முன் அவரது நாவல்களான “காதுகள்”, “வேள்வித் தீ” ஆகியவற்றை வாசித்துள்ளேன். வேள்வித் தீ நாவலின் களம் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியல். பட்டு நெசவும் அதைச் சார்ந்த வாழ்க்கை முறையும் எனது சிறு வயதுச் சூழலுடன் ஒத்துப் போனதால் வேள்வித் தீ என்னை மிகவும் கவர்ந்தது.  சிறுகதைகளுக்கு வருவோம். முழுத் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கும் மேல். அவர் எழுதிய முதல் சிறுகதை “சிட்டுக் குருவி”. இரண்டு மூன்று பக்கங்கள் தான். வாசித்தபின், இக்கதை ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. சிலிர்ப்பூட்டுவது. எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் பதின் பருவத்திலேயே இந்தக் கதையை எழுதியுள்ளது மேலும் வியப்பு.  ஒவ்வொரு கதையும் பேரனுபவம். வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் அல்ல. “குயிலி” என்றொரு கதை. உலகத் தரமானது. டிஸ்னி போன்ற நிறுவனங்களால் எடுக்கப்படும் 3D படத்தைப் பார்த்தது போன்றதொரு அனுபவம். பொதுவாகக்  கண் முன் கதை விரியும் என்பார்...