Skip to main content

வைஸ் ஒன் : எங்கெங்கும் ஏ.ஐ #4

நித்தம் நித்தம் புத்தம் புதிய செயற்கை நுண்ணறிவுச் சாப்ட்வேர்கள் வந்த வண்ணம் உள்ளன.

இது போன்ற டூல்கள் குறித்த தகவல்களைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியே எங்கெங்கும் ஏ.ஐ.


அடோபியின் பாட்காஸ்ட் என்ஹான்ஸ், ஃபோட்டோக்களை மெருகேற்கும் மேஜிக் ஸ்டூடியோ, பிடிப் ஃபைல்களுடன் உரையாட PDF.ai என மூன்று ஏ.ஐ டூல்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.

அந்த வரிசையில் நான்காவதாக இன்று, "வைஸ் ஒன்" (Wiseone) என்னும் டூல் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வைஸ் ஒன் மிகவும் சுவாரசியமான டூல். இது ஒரு பிரவுசர் எக்ஸ்டன்சன்.

கூகுள் குரோம் பிரவுசருடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்னெவெல்லாம் செய்யும் வைஸ் ஒன்?

- வலைப் பக்கங்களின் கண்டென்ட்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஒரு நீளமான வலைப் பக்கத்தை முழுதும் படிக்காமல் "சம்மரைஸ்" என்றால் தெளிவாகச் சுருக்கிக் கொடுக்கிறது.

- வலைப் பக்கங்களுடன் சாட் செய்ய உதவுகிறது. இது கடினமான தகவல்களைக் கொண்டுள்ள பக்கங்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது.

- இந்தப் பக்கத்திலுள்ள கண்டென்ட்களுக்கு தொடர்புடைய செய்திகளைச் சட்டெனத் தேடிக் காண்பிக்கின்றது.

எப்படிப் பெறுவது ?

வைஸ் ஒன் டூலை உங்களின் குரோம் பிரவுசருடன் இணைப்பது மிகவும் எளிது. அவர்களின் ஹோம் பேஜிலுள்ள "Add to Chrome" என்பதைக் கிளிக் (https://wiseone.io/) செய்தாலே 'குரோம்'பேட்டைக்குள் குடியேறிவிடுகிறது வைஸ் ஒன்.

"டீப் லேர்னிங்" என்னும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது வைஸ் ஒன். தொடர்ந்து அப்டேட் ஆகிக் கொண்டே இருப்பதால் வைஸ் ஒன் வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக வேலை செய்யும் வாய்ப்புள்ளது.

எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வலைத் தளங்களில் இதைத் சோதித்து "வெற்றி! வெற்றி!!" என அறிவித்துளனர்.

முயன்று பாருங்கள்.

Comments