Skip to main content

எய்ட்டிஃபை : எங்கெங்கும் ஏ.ஐ

 எய்ட்டிஃபை : எங்கெங்கும் ஏ.ஐ #5

நீளமான ஒரு யூடியூப் வீடியோ. உங்களுக்குத் தேவையான தகவல்கள் செறிந்துள்ளன. முழுவதும் பார்க்க விரும்புகிறீர்கள். ஆனாலும் தற்சமயம் நேரமில்லை. பொறுமையும். என்ன செய்யலாம்?
இதற்கான தீர்வோடு வந்துள்ளது "எய்ட்டிஃபை" (Eightify). இது ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி.



குரோம் எக்ஸ்டென்சன். ஒரே கிளிக்கில் உங்கள் 'குரோம்'பேட்டைக்கு வந்துவிடுகிறது.
என்னவெல்லாம் செய்கிறது எய்ட்டிஃபை?
- வீடியோவில் சொல்லப்பட்டிருப்பதன் கதைச் சுருக்கத்தைத் தருகிறது.
- டைம் ஸ்டாம்ப்புடன் இருப்பதால், வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதிக்கு எளிதில் செல்லலாம்.
- மொத்தச் சம்மரியையும் உங்களுக்குத் தேவையான வடிவில் எக்ஸ்ஃபோர்ட் செய்து கொள்ளலாம்.
- "இன்சைட்ஸ்" என்றொரு வசதியுள்ளது. முழு வீடியோவையும் பார்த்துவிட்டு, அதைப் பற்றி ஒரு குட்டிக் கட்டுரை எழுதியது போலுள்ளது.
இலவசப் பிளானில் வாரத்திற்கு மூன்று சம்மரிகள் மட்டுமே. அதுவும் வீடியோ ஒரு மணிநேரத்திற்கும் குறைவானதாக இருக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ஸன் செய்து அன்லிமிட்டட் ஆப்ஷனைப் பெறலாம்.
ஆங்கிலம் மட்டுமேயல்ல. பிற மொழி வீடியோக்களின் சம்மரியையும் பெறலாம். இதுவரை இந்திய மொழிகள் எதுவும் இல்லை. விரைவில் வருமென்று நம்புவோம்.
முயன்று பாருங்கள்.

Comments