Skip to main content

The Binary Lines...

சில நேரங்களில் எனக்கு ஒரு சந்தேகம் வருவதுண்டு, "திருக்குறள் ஒரே ஒரு மனிதரால் எழுதப்பட்ட நூல் தானா?" என்று. திருவள்ளுவர் வாழ்ந்தது இன்டர்நெட் இல்லாத காலம். (!!)ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் "இத்துணை துறைகள் சார்ந்த அறிவை ஒரே ஒரு மனிதர் எந்த ஒரு தகவல் தொடர்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத காலத்தில் எப்படி பெற்றார்? ".

ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் அவர் சார்ந்த துறை குறித்து திருவள்ளுவரை மேற்கோள் காட்டும் பொழுதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும். 

மென்பொருள் வடிவாக்கம் குறித்து திருக்குறள் கருத்துக்கள் ஏதேனும் ஒத்து வருமா என்று திருக்குறள் அதிகாரங்களை "முறைத்து" பார்த்துக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது "வினைசெயல் வகை" என்ற அதிகாரம். 

இந்த அதிகாரத்தில் குறிப்பிட பட்டுள்ள குறள்களில் "வினை" என்பதை "மென்பொருள் வடிவாக்கம்" என்று எடுத்துக்கொண்டால் , சாப்ட்வேர் இன்ஜினியரிங் கொள்கைகளுடன் அவை ஒத்து போவதை உணரலாம் .

எடுத்துக்காட்டாக :



பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 

இருள்தீர எண்ணிச் செயல்.

Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
(Mostly on these parameters only we optimize our algorithms)




முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 

படுபயனும் பார்த்துச் செயல்

An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
(Nothing but the feasibility analysis of SDLC)..



வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் 

தீயெச்சம் போலத் தெறும்

When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire. 
(Reminds me the problems caused by unsolved bugs in a software)



தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க 

தூங்காது செய்யும் வினை

Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
[Reminds me the priority based process scheduling algorithm]



சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு 

தாழ்ச்சியுள் தங்குதல் தீது

Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil
[Reminds me the implementation delay in SDLC]



செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 

உள்ளறிவான் உள்ளம் கொளல்

The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.
[SRS gathering from the user and understanding their best practices]


எனது இந்த போஸ்டின் நோக்கம் திருவள்ளுவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் பற்றி எல்லாம் தெரிந்திருந்தது என்று கூறுவது அல்ல . 

திருவள்ளுவர் என்ற மாமனிதரின் தீர்க்க தரிசனமான சிந்தனைகளை கண்டு நாம் வியப்படைவதை தவிர வேறென்ன செய்ய முடியும்...

Comments