சில நேரங்களில் எனக்கு ஒரு சந்தேகம் வருவதுண்டு, "திருக்குறள் ஒரே ஒரு மனிதரால் எழுதப்பட்ட நூல் தானா?" என்று. திருவள்ளுவர் வாழ்ந்தது இன்டர்நெட் இல்லாத காலம். (!!)ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் "இத்துணை துறைகள் சார்ந்த அறிவை ஒரே ஒரு மனிதர் எந்த ஒரு தகவல் தொடர்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத காலத்தில் எப்படி பெற்றார்? ". ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் அவர் சார்ந்த துறை குறித்து திருவள்ளுவரை மேற்கோள் காட்டும் பொழுதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும். மென்பொருள் வடிவாக்கம் குறித்து திருக்குறள் கருத்துக்கள் ஏதேனும் ஒத்து வருமா என்று திருக்குறள் அதிகாரங்களை "முறைத்து" பார்த்துக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது "வினைசெயல் வகை" என்ற அதிகாரம். இந்த அதிகாரத்தில் குறிப்பிட பட்டுள்ள குறள்களில் "வினை" என்பதை "மென்பொருள் வடிவாக்கம்" என்று எடுத்துக்கொண்டால் , சாப்ட்வேர் இன்ஜினியரிங் கொள்கைகளுடன் அவை ஒத்து போவதை உணரலாம் . எடுத்துக்காட்டாக : பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். Do an ...